சோகம்... லாரியில் இருந்து இறங்குகையில் மார்பிள் ஸ்லாப் விழுந்து தொழிலாளி மரணம்!

 
ஸ்லாப்
 

கேரள மாநிலம் காசர்கோடு மொவ்வல்  கிராமத்தில் கன்டெய்னர் லாரியில் இருந்து இறக்கிக் கொண்டிருந்த மார்பிள் ஸ்லாப் மார்பில் விழுந்ததில் சுமை தூக்கும் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மொவ்வல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனையில் ஈடுபட்டனர். போலீசாரின் விசாரணையில், உயிரிழந்தவர் மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் உள்ள கைலாரஸ் பகுதியைச் சேர்ந்த ஜமீன் கான் (42) என அடையாளம் காணப்பட்டார்.

ஆம்புலன்ஸ்

போலீசாரின் கூற்றுப்படி, “மங்களூரு கப்பல் முனையத்தில் இருந்து மார்பிள் ஸ்லாப்களுடன் மொவ்வலுக்கு கண்டெய்னர் லாரி வந்தது. கான் மற்றும் மற்றொரு தொழிலாளி மொவ்வலில் உள்ள ஒரு வாடிக்கையாளரின் வீட்டிற்கு மார்பிள் ஸ்லாப்புகளை டெலிவரி செய்வதற்காக ஒரு சிறிய வாகனத்திற்கு பளிங்கு அடுக்குகளை மாற்றுவதற்கு கண்டெய்னர் டிரக்கில் நுழைந்தனர். அப்போது எதிர்பாராமல் கண்டெய்னர் டிரக்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஸ்லாப் ஒன்று நழுவி கான் மீது விழுந்தது. அவரது மார்பில் ஸ்லாப் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

உத்தரபிரதேச போலீஸ்

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, கானை வெளியே இழுத்து, உத்மாவில் உள்ள உத்மா நர்சிங் ஹோமுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். மொவ்வல் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப்பதிவு செய்து, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (முன்னர் சிஆர்பிசி) பிரிவு 194 இன் கீழ் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை