அதிர்ச்சி... சபாநாயகர் கண்முன்னே இளம்பெண் தீக்குளிப்பு!!

 
தீக்குளிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் மாவட்ட வேளாண் பொறியியல் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்  வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டு உதவிகளை வழங்கினார்.  திடீரென சபாநாயகர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கண் எதிரே மைதானத்தில் பெண் ஒருவர் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.  

வேளாங்கண்ணி

இதைக் கவனித்த அலுவலர்கள் மற்றும்  காவல்துறையினர்   அந்த பெண்ணை தடுத்து மீட்டனர்.  ஆட்டோவில் அரசு மருத்துவமனைக்கு அப்பெண் அனுப்பி வைக்கப்பட்டார்.
 அவரிடம் நடைபெற்ற விசாரணையில் அவர் பாளையங்கோட்டை எம்கேபி நகரில் வசித்து வரும்   வேளாங்கண்ணி எனத் தெரியவந்தது.  அத்துடன் கந்துவட்டி கொடுமை காரணமாக அவர் தீக்குளிக்க முயற்சி செய்ததும் தெரியவந்துள்ளது.

வேளாங்கண்ணி


அவரை கந்துவட்டி கொடுமை செய்த  ஹேலினா மற்றும் கிளாடிஸ் ஆகிய இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக வேளாங்கண்ணி கொடுத்திருந்த காசோலைகளை மீட்டுத் தருவதாகவும்  போலீஸார் உறுதி அளித்தனர்.    சபாநாயகர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கண்ணெதிரே கந்துவட்டி கொடுமை காரணமாக பெண் ஒருவர் தீக்குளித்த  சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web