அதிர்ச்சி... க்யூ ஆர் கோட் மூலம் ரூ17 லட்சம் மோசடி செய்து தப்பி ஓடிய இளைஞர்!!

 
துகாராம்

தேனி மாவட்டத்தில்  மொபைல் உதிரி பாகங்கள் கடை  நடத்தி வருபவர்  மதன் சிங். இவர் ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். இவர் தனது கடைக்கு பணியாளாக ராஜஸ்தானிலிருந்து  தூதராம் என்பவரை பணிக்கு அமர்த்தினார்.  2 வருடங்களாக தனது கடையில் தூதராம் பணிபுரிந்து வந்த நிலையில் அவருக்கு  கடையின் மேலாளர் பொறுப்பை வழங்கினார். இடையில் அவருடைய குடும்பப்பிரச்சனை  காரணமாக ராஜஸ்தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவானது. இதனையடுத்து  தூதராமிடம் கடையின் முழு பொறுப்பை ஒப்படைத்து விட்டு ராஜஸ்தான்  சென்றார்.  

துகாராம்


4 மாதங்களுக்கு பிறகு கடந்த வாரம் தேனி திரும்பியவர் கடையின் வரவு செலவுகளை பார்த்துள்ளார். அப்போது வங்கி கணக்கில் பணல் இல்லாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். கடையில் உள்ள  டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்காக வைக்கப்பட்டிருந்த  க்யூ ஆர் ஸ்கேனை பார்த்த போது  மதன் சிங்கின்  க்யூ ஆர் கோடிற்கு பதிலாக   தூதராம் தனது வங்கியின் அக்கவுண்ட் உள்ள க்யூ ஆர் ஸ்கேனை வைத்து இருந்தது மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதன்படி கடந்த 4 மாதங்களில் மட்டும் சுமார் 17 லட்சம் வரை மோசடி செய்த தூதராம் பணத்தோடு எஸ்கேப் ஆகியுள்ளார்.

துப்பாக்கி


இதனையடுத்து மோசடியில் ஈடுபட்டு தப்பி ஓடிய தூதராமை வீடியோ காலில் தொடர்பு கொண்டு மதன் சிங் பேசினார்.    பணத்தை திருப்பி கேட்டால் துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என்று வீடியோ காலில் துப்பாக்கியை வைத்து மிரட்டல் விடுத்துள்ளார்.  அதிர்ச்சி அடைந்த மதன் சிங் தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web