மாணவிகளிடம் ஆபாச செய்கை காட்டிய இளைஞரை கட்டி வைத்து தர்ம அடி!!

 
சந்தோஷ்

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இங்கு சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி மாணவிகளுக்கு ஆபாச சைகை காட்டிய இளைஞரை பொதுமக்கள் மின் கம்பத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இன்று மாலை  பள்ளி முடிந்து மாணவிகள் வழக்கம் போல் பேருந்து நிலையம் வந்திருந்தனர்.

மாணவிகள்


அந்த சமயத்தில் எதிரில் நின்று  இளைஞர் ஒருவர் மாணவிகளை நோக்கி ஆபாச சைகை காட்டியுள்ளார். இதுகுறித்து மாணவிகள் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பொதுமக்களிடம் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் அந்த இளைஞரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். அத்துடன்  காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  காவல்துறையினர் இளைஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

போலீஸ்

அந்த விசாரணையில் அவரின் பெயர் சந்தோஷ். மேலபுலம் கிராமத்தில் வசித்து வருபவர் எனத்   தெரிய வந்தது.இவர் டிப்ளமோ படித்து விட்டு சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து  வருகிறார். இதன் அடிப்படையில்  சந்தோஷ் மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web