சொத்தை விற்று செலவு செய்தார்... தவெக புஸ்ஸி ஆனந்திடம் இளம்பெண் வாக்குவாதம்!

 
தவெக
 

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் கேள்வி கேட்ட பெண்ணை பவுன்சர்கள் அங்கிருந்து இழுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்த மாதம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக முதல் மாநாடு நடைபெற உள்ள நிலையில், மாவட்டந்தோறும் மாநாடுக்கான பணிகள், ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் அக்கட்சியின் பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த்.

இந்நிலையில், தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் கலந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தபோது, மேடை அருகில் சென்ற பெண் ஒருவர், "என்னுடைய அண்ணன் சொத்தை விற்று விஜய் மக்கள் இயக்கத்தை வளர்த்தவர். ஆனால் அவரை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளது ஏன்?" என கேள்வி கேட்டு முறையிட்டார்.

அப்போது பாதுகாப்புக்காக வந்திருந்த பவுன்சர்கள் அந்த பெண்ணை அங்கிருந்து இழுத்துச் சென்று, மண்டபத்தில் உள்ள கண்ணாடி அறையில் தங்க வைத்தனர். இதனை வீடியோ எடுக்க விடாமல் செய்தியாளர்களிடம் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

புஸ்ஸி ஆனந்த்

விஜய் மக்கள் இயக்கத்தில் தஞ்சை மாவட்ட தலைவராக இருந்த தங்கதுரையின் தங்கை புஷ்பா தான் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் இப்படி வாக்குவாதம் செய்துள்ளார்.விஜய் மக்கள் இயக்கத்திற்காக தன்னுடைய இடத்தை விற்று செலவு செய்த தங்கதுரைக்கு, கட்சி தொடங்கிய பிறகு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web