28 வயசு தான்... ஊசி போட்ட அடுத்த நொடி மயங்கி விழுந்த இளம்பெண்; அரசு மருத்துவமனையில் பரபரப்பு!

 
ஊசி
 


கேரள மாநிலம் திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில், சிறுநீரகக் கல் சிகிச்சைக்கான ஊசி போடப்பட்ட இளம்பெண் ஒருவர், ஊசி செலுத்தப்பட்ட அடுத்த நொடியிலேயே மயங்கி சரிந்து கீழே விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 
மருத்துவரின் அலட்சியமான சேவை காரணமாக தனது மனைவி பேச்சு மூச்சில்லாமல் இப்படி மயங்கி கீழே விழுந்துள்ளார் என்று மருத்துவர் மீது கணவர் புகார் அளித்துள்ளார். இளம்பெண்ணின் கணவர் கிருஷ்ணன் தங்கப்பன் இது குறித்து கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 
மயக்கமடைந்த பெண் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.  இம்மாதம் 15ம் தேதி கிருஷ்ணா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அந்த இளம்பெண் சென்றுள்ளார்.

இளம் பெண், தொடர் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சைப் பெற மருத்துவமனை சென்றுள்ளார். அப்போது ஒவ்வாமை பரிசோதனையை மேற்கொள்ள மருத்துவர்கள் இளம்பெண்ணுக்கு ஊசி போட்டதாக தெரிய வந்துள்ளது. 28 வயதுடைய பெண் கடந்த 6 நாட்களாக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நெய்யாற்றின்கரை பொது மருத்துவமனை டாக்டர் வினு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!