பகீர் வீடியோ... சட்டைக் காலரை பிடித்து இளைஞருக்கு பளார் விட்ட இளம்பெண் !!

 
நாய்

செல்லப்பிராணிகள் வளர்ப்பு என்பது அவரவர் விருப்பம். ஆனால் சமீபகாலமாக அது ஸ்டேட்டஸ் சிம்பலாக மாறி அருகில் வசிப்பவர்கள், பழகுபவர்களை எரிச்சல் அடைய வைத்து விடுகின்றனர். இதனால் அடுத்தவர்களை தொல்லை செய்கிறோம் என்பதை நினைப்பதில்லை.   தலைநகர் டெல்லி அருகே நொய்டா மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் நாய்களின்  எண்ணிக்கை அதிகம்.  


 

நாய்களை வளர்ப்போரின் அலட்சியப் போக்கால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர்.  இந்நிலையில், நாயை காணவில்லை என இளம்பெண் ஒருவர் போஸ்டர் ஒட்டியிருந்தார்.    எய்ம்ஸ் கோல்ஃப் அவென்யூ சொசைட்டியில் வசிக்கும் அர்ஷி என்ற பெண், தான் வளர்த்து வந்த நாயை காணவில்லை என போஸ்டர் ஒட்டியதாகவும், அந்த போஸ்டரை கிழித்ததாக நவீன் என்பவருடன் சண்டையிடும் காட்சியும் வீடியோவில் பதிவாகியுள்ளது.   பாதிக்கப்பட்ட நவீன் என்பவரின் டி-ஷர்ட் காலரைப் பிடித்து இழுக்கும் அர்ஷி, அபார்ட்மெண்ட் உரிமையாளர்கள் சங்கம் என்ன உச்ச நீதிமன்றத்தை விட பெரியதா? என கேள்வி எழுப்புகிறார்.  அர்ஷி  நவீனின் தலைமுடியை இழுத்து,  அறைந்தபடி, அவரை தள்ளிக் கொண்டு செல்லும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.

போலீஸ்

கடந்த சில நாட்களுக்கு முன் அவரது நாய் காணாமல் போய்விட்டது. இதனையடுத்து  நாய் காணாமல் போனதை  வீட்டு வளாகத்தைச் சுற்றி அர்ஷி நோட்டீஸ் ஒட்டியுள்ளார். தீபாவளியை முன்னிட்டு பெயிண்ட் அடிக்கும் பணிக்காக   சுவரொட்டிகளை நவீன்   அகற்றியதாக கூறுகிறார். இவர்களின்   சண்டைக்கு இதுவே காரணம் என கூறப்படுகிறது. 
 இச்சம்பவம் குறித்து  நவீன் காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளார்.   அவரது புகார் மற்றும் வீடியோவின் அடிப்படையில் அந்த பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web