பகீர் சிசிடிவி... ட்ரெட் மில்லில் ஓடிக் கொண்டிருந்த போது இளைஞர் மயங்கி சரிந்து பலி!!

தற்போது மிக இளம் வயதில் மாரடைப்புக்கள் ஏற்பட்டு உயிரிழப்பது சகஜமாகி வருகிறது. நடனம் ஆடிக்கொண்டிருக்கும் போதே மரணம், மணமேடையில் மரணம், உடற்பயிற்சி செய்யும் போது மரணம், பள்ளி மாணவன் விளையாடும் போது மாரடைப்பு என அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த வரிசையில் ஜிம் டிரெட் மில்லில் ஓடிக்கொண்டிருந்த 19 வயது இளைஞர் ஒருவர் திடீரென ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
SHOCKING:
— Satheesh (@Satheesh_2017) September 17, 2023
Man Dies Of Heart Attack While Running On Treadmill At Ghaziabad Gym 😱🙄
10Secs தான் எல்லாம் முடிஞ்சிருச்சு.
இந்த மாதிரி செய்திகள் இப்ப அதிகளவுல வருது. இதையெல்லாம் பார்க்கும்போது வாழ்க்கையே பயமா இருக்கு 😭 pic.twitter.com/NdtQag40KL
இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபத்தில் சரஸ்வதி விஹார் பகுதியில் சித்தார்த் என்ற 19 வயது இளைஞர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். உயிரிழந்த சித்தார்த் குமார் சிங் நொய்டாவில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவரது தந்தை நொய்டாவில் வசித்து வருகிறார். தாயார் பீகாரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
வேகமாக அவர் ட்ரெட் மில்லில் ஓடிக் கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த அவர் ட்ரெட்மில்லில் இருந்து அப்படியே சரிந்து கீழே விழுந்தார்.
உடனே அவரை ஜிம்மில் இருந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடினர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்து விட்டனர். இதனை அறிந்த அவரது பெற்றோர்கள் கதறி துடித்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!