வைரல் வீடியோ... வெள்ளத்தில் சிக்கிய நாயை காப்பாற்றிய இளைஞர்கள்!

வெள்ளத்தில் தவிக்கும் நாய் ஒன்றை 2 இளைஞர்கள் ஏணி உதவியோடு மீட்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஒரு பெரிய தடுப்பனையின் மதகை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் நாய் ஒன்று வெள்ளத்தை கடந்து வர முடியாமல் பரிதவித்தபடி நின்று கொண்டே இருக்கிறது.
தடுப்பணையின் கரையில் ஏராளமானவர்கள் கூடி நின்று அதை வேடிக்கை பார்த்தவண்ணம் உள்ளனர். அப்போது 2 இளைஞர்கள் மட்டும் துணிச்சலாக ஒரு ஏணியுடன் வெள்ளத்தில் நடந்து வருகிறார்கள். தாழ்வான பாறை பகுதிக்குள் ஏணியை பாலம் போல வைத்து நாயைப் பிடித்து ஏணியில் ஏற்றி வெள்ளத்தைக் கடந்து செல்கின்றனர்.
இந்த வீடியோ சுமார் 80000க்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர். இந்த நாயை துணிச்சலாக வெள்ளத்தில் இருந்து மீட்ட இளைஞர்களின் நிஜ ஹீரோக்கள் என பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா