அதிர்ச்சி வீடியோ... 100 அடி பாலத்தில் இருந்து குதித்து உயிரை விட்ட இளைஞர்.. பகீர் பிண்ணனி!

 
அவ்னிஷ்


இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதிர்ச்சி தரும் சம்பவம்  குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் ஒருவர் தன்னை துரத்தியவர்களிடம் தப்பிக்க 100 அடி உயர பாலத்தில் இருந்து குதித்து பரிதாபமாக உயிரை விட்டார்.

ஜான்பூர் மாவட்டத்தில் தன்னை துரத்திய கிராம மக்களின் அடியில் இருந்து தப்பிக்க பாலத்தில் ஏறிய அவ்னிஷ் குமார் (31) என்பவர் 100 அடி உயரத்தில் இருந்து குதித்து பரிதாபமாக உயிரிழந்தார்.குழந்தை திருடன் எனக் கூறி கிராம மக்கள் அவரை துரத்தியதால், பாலத்தில் ஏறி சுமார் 8 மணி நேரமாக அங்கும் இங்குமாக ஓடி போக்கு காட்டி வந்துள்ளார்.

ஆம்புலன்ஸ்

அவரை மீட்பதற்காக போலீசார் பாலத்தில் ஏறியதும் அங்கிருந்து குதித்துள்ளார்.உடனே அவரை போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில்   வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை