காவல் நிலையம் முன்பு தீக்குளித்த இளைஞர்... பரபரப்பு!!

ஆந்திரா மாநிலம், விஜயவாடாவில் வசித்து வருபவர் மணிகண்டா. இவருடைய மனைவி துர்கா. இவருக்கும் சோனு என்பவருக்கும் இடையே ரகசிய தொடர்பு ஏற்பட்டதால் கணவனைப் பிரிந்து காதலனுடன் சென்றுவிட்டார். மணிகண்டா தனது மனைவியை பல இடங்களில் தேடி வந்தார். அப்போது, சித்தூர் மாவட்டத்தில் உள்ள பாக்கரா பேட்டையில் சோனுவுடன் வசித்து வருவது தெரியவந்தது. இதையடுத்து, தனது மனைவியை எப்படியாவது மீண்டும் தன்னுடன் அழைத்து செல்ல வேண்டும் என்று முடிவு செய்த மணிகண்டா திருப்பதி அருகே உள்ள சந்திரகிரிக்கு வந்தார். காவல் நிலையத்தில் தனது மனைவி சோனுவை மீட்டுக் கொடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.
ஆனால், அங்கு அப்போது பணியில் இருந்த போலீஸ்காரர் சீனிவாஸ், அலட்சியமாக நடந்து கொண்டார். மீண்டும் இங்கு வந்து புகார் கொடுக்க முயற்சித்தால் உன்னைத் தூக்கி உள்ளே போட்டுவிடுவேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த மணிகண்டா அங்கிருந்து சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து பாட்டிலில் திரும்பிய அவர், காவல் நிலையம் எதிரே நின்றபடி தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது காவல் நிலையத்தை நோக்கி ஓடி வந்த அவரைப் பார்த்த காவல்துறையினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் உடனடியாக தீயை அணைத்து திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்தனர். 80 சதவீத தீக்காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புகார் கொடுக்க வந்த மணிகண்டாவிடம் போலீஸார் நடந்து கொண்ட விதம் பற்றி விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். காவல் நிலையம் முன்பு வாலிபர் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது
60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!