60 நாட்களுக்கு பிறகு மீண்டும் உயிரியல் பூங்கா திறப்பு!

 
உயிரியல் பூங்கா
 

பறவைக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக கடந்த ஆகஸ்ட் 30 முதல் மூடப்பட்டிருந்த தில்லி தேசிய உயிரியல் பூங்கா, இன்று (நவம்பர் 8) முதல் மீண்டும் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த அதிகாரிகளிடமிருந்து அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கோழி காய்ச்சல்

பூங்கா மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், கடுமையான உயிரியல் பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுத்தம் செய்தல், கண்காணிப்பு மற்றும் பல சுற்றுச் சோதனைகள் நடத்தப்பட்டு, போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் நிறுவனத்தில் மாதிரிகள் சோதிக்கப்பட்டதில் அனைத்தும் எதிர்மறையாக வந்தது. இதன் பின்னரே பூங்கா திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

1959 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தில்லி உயிரியல் பூங்கா, 176 ஏக்கர் பரப்பளவில் 96 வகையான விலங்குகள், பறவைகள் மற்றும் ஊர்வன்களை கொண்டுள்ளது. 2016 மற்றும் 2021 ஆண்டுகளிலும் இதேபோல் பறவைக் காய்ச்சல் காரணமாக பூங்கா மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!