வேளாங்கண்ணியில் தேர்த் திருவிழா.!!.. மரியே வாழ்க.. அலைகடலென திரண்ட பக்தர்கள்!!

 
வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா

நாகப்பட்டினம்  மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயம் அமைந்துள்ளது வங்கக்கடலோரம் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் கட்டிட அமைப்பை ரசிக்க  உலகம் முழுவதிலும் இருந்து வருடத்தின் எல்லா நாட்களிலும் சுற்றுலாப்பயணிகள் வருகை தருவர்.   இதன் காரணமாக வேளாங்கண்ணியில் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும்.  ஒவ்வொரு ஆண்டும்  செப்டம்பர் 8ம் தேதி  மாதாவின் பிறந்த நாளை முன்னிட்டு 10 நாட்கள்  திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

 ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் தேரை புனிதம் செய்து வைத்தார்.  முதன்முறையாக மும்மத பிரார்த்தனை நடைபெற்றது. இதில், நாகூர் ஆண்டவர் தர்கா தலைமை அறங்காவலர் முகம்மது ஹாஜி உசேன், பரம்பரை கலீபா மஸ்தான், வேளாங்கண்ணி ரஜகிரீஸ்வரர் கோயில் தலைமை குருக்கள் நீலகண்டன்  கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, இரவு 7.30 மணிக்கு புனித ஆரோக்கிய மாதா பெரிய தேரிலும், அதற்கு முன்னால் 6 சிறிய சப்பரங்களில் மிக்கேல், சம்மனசு, செபஸ்தியார், அந்தோணியார், சூசையப்பர், உத்திரிய மாதாவும்   எழுந்தருளினர்.  தேர் பவனி, ஆலயத்தை சுற்றி ஊர்வலமாகச் சென்று மீண்டும் பேராலய முகப்பை வந்தடைந்தது. பக்தர்கள் 'மரியே வாழ்க, மாதாவே வாழ்க, பசிலிக்கா பசிலிக்கா' என பக்திப் பரவசத்துடன் முழக்கங்களை எழுப்பினர்

இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பெருவிழா!

அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா  ஆகஸ்டு 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில், வேளாங்கண்ணி பேராலய விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்ப்பவனி இன்று செப்டம்பர் 7ம் தேதி வியாழக்கிழமை மாலை  நடைபெறுகிறது.  

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர் பவனி

தேர்பவனியில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணி வந்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக வேளாங்கண்ணியில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம்  அலைமோதி வருகிறது.  செப்டம்பர் 8 வெள்ளிக்கிழமை நாளை  ஆரோக்கிய மாதா பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.இதனையொட்டி பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web