இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் அரசு வேலை கிடையாது.. உச்ச நீதிமன்றம் பகீர் ஒப்புதல்..!

 
குடும்பம்

ராஜஸ்தான் அரசின் 'இரண்டு குழந்தைகள் கொள்கை' சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 1989 ஆம் ஆண்டில், ராஜஸ்தான் மாநில சட்டமன்றம் 'இரண்டு குழந்தைகள் கொள்கை'யின் கீழ் ஒரு சட்டத்தை இயற்றியது, இது இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களை அரசாங்க வேலைகளுக்கு தகுதியற்றதாக மாற்றியது.

இந்த சட்டத்தை எதிர்த்து முன்னாள் ராணுவ வீரர் ராம்ஜி லால் மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ராம்ஜி லால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், திபாங்கர் தத்தா, கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய 3 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியது.

அந்த தீர்ப்பில், ராஜஸ்தான் அரசு கொண்டு வந்துள்ள 'இரண்டு குழந்தைகள் கொள்கை' தொடர்பான சட்டம் செல்லும். இந்த சட்டம் பாரபட்சமானது அல்ல என்று கூறப்பட்டது. அக்டோபர் 12, 2022 அன்று, உச்ச நீதிமன்றம் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. முன்னாள் ராணுவ வீரர் ராம்ஜி லால் தாக்கல் செய்த மனுவையும் நிராகரித்தது.

ஜனவரி 2017 இல் பாதுகாப்புப் படையில் இருந்து ஓய்வு பெற்ற ராம்ஜி லால், ராஜஸ்தான் காவல்துறையில் கான்ஸ்டபிள் பதவிக்கு மே 2018 இல் விண்ணப்பித்தார். ஆனால் ஜூன் 1, 2002 க்குப் பிறகு அவருக்கு இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்ததால், ராஜஸ்தான் காவல்துறை துணைப் பணி விதிகளின் கீழ் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில்தான் ராம்ஜி லால் நீதிமன்றத்தை அணுகியது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web