நள்ளிரவில் அடுக்குமாடி வீடுகளை வேவு பார்த்த ட்ரோன்.. அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள்..!

 
ட்ரோன்

அண்ணா நகர் பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் ஜன்னல்களை ட்ரோன் கேமராவை வைத்து நள்ளிரவில்  வேவ்வு பார்த்த வட மாநிலத்தை சேர்ந்த நபரால் பரபரப்பு நிலவியது. சென்னை அண்ணா நகர் மேற்கு மாவட்டம் N Block 24 ,வது தெருவில் லோட்டஸ் காலனி  அடுக்குமாடி குடியிருப்பில்  நேற்று நள்ளிரவு சுமார் 1.30 மணி அளவில் ஒவ்வொரு குடியிருப்பு ஜன்னல்களையும் நோட்டமிட்டு இருந்த ட்ரோன் கேமராவை  அங்கு வசித்து வரும் ஒருவர் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.

அண்ணா நகரில் நடுராத்திரியில் பறந்த ட்ரோன்.. அடுக்குமாடி வீடுகளின் ஜன்னலை  நோட்டமிட்டதால் பரபரப்பு | A drone flew over the windows of a private  apartment in Chennai's ...

பின்னர் தனது அடக்குமாடி குடியிருப்பு ஜன்னல் ஓரம் வந்த டிரோன் கேமரா உள்ளே நுழைந்தது. பின்னர் அந்த கேமாராவை மடக்கிப் பிடித்துள்ளார். இதையடுத்து குடியிருப்பில் இருக்கும் அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதும் மர்ம நபர் நேரடியாக வந்து தனது ட்ரோன் கேமராவை கொடுக்கும்படி மிரட்டி உள்ளார் .

அண்ணாநகர் காவல் நிலையம் அருகே திமுக பேச்சாளர் வெட்டிக்கொலை: 4 பேர் போலீசில்  சரண்

பின்னர் உன் பெயர் என்ன யார் என்று கேட்டதும் இந்தியில் பேசி தப்பி ஓடியுள்ளார். குடியிருப்பு வாசிகள் வந்தவர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என தெரிந்து கொண்டனர். இதனையடுத்து அந்த  ட்ரோனை அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்க உள்ளதாக கூறப்படுகிறது,  மேலும் அதே குடியிருப்பில் ஏற்கனவே ஒரு கும்பல் கத்தியை வைத்து விரட்டிய  சம்பவம் நடைபெற்றது. மேலும் அருகே உள்ள அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார்கள் கொடுத்தும் எந்த ஒரு பயனும் இல்லை எனவும் அங்கே இருக்கும் அடுக்குமாடி  குடியிருப்பு வாசி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது  என்பது குறிப்பிடத்தக்கது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web