இதெல்லாம் மாரடைப்புக்கான அறிகுறிகள்... அலட்சியப்படுத்தாதீங்க!!

 
மாரடைப்பு

நம்முடைய வாழ்வியல் முறை எந்த அளவு தொழில் நுட்ப வளர்ச்சியை அளித்துள்ளதோ அதே அளவுக்கு நோய்களையும் கொடுத்துள்ளது. அதிலும் சமீபகாலமாக மாரடைப்புகள் அதிகரித்து வருகின்றன. பள்ளி மாணவர்கள் தொடங்கி வயதானவர்கள் வரை எந்த நேரம் என சொல்லமுடியாமல் அறிகுறிகளும் உணர்த்தாலும் திடீரென வந்து காவு வாங்கிவிடுகிறது. மாரடைப்புக்கான அறிகுறிகளை கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதே இதயம் சார்ந்த நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் இருக்கக்கூடிய மிகப்பெரிய தடையாக கருதப்படுகிறது.

மாரடைப்பு

ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான அறிகுறிகளை ஒரு சிலர் அசிடிட்டி அல்லது கேஸ்ட்ரிக் பிரச்சனையாக இருக்கலாம் என நினைத்து  மருத்துவரின் உதவியை நாடாமல், கை வைத்தியம் செய்து, மருத்துவமனைக்கு செல்வதில் தாமதத்தை ஏற்படுத்துகின்றனர்.  ஒரு ஆண்டுக்கு 18 மில்லியன் நபர்கள் இதயம் சார்ந்த நோய்கள் காரணமாக உயிரிழப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.  நெஞ்சில் ஒருவித எரிச்சல் உணர்வை அனுபவிக்கும் பொழுது உடனடியாக நாம் கடைசியாக சாப்பிட்ட உணவுடன் அதனை தொடர்புப்படுத்தி பார்ப்பது வழக்கமாகி விட்டது.  


அசிடிட்டி என்பது நமது நெஞ்சு பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். ஹார்ட் அட்டாக் சமயத்திலும் இதே போன்ற உணர்வு ஏற்படும். இந்த இரண்டு நோய்களுக்கான அறிகுறிகளில் ஒன்று தவிர்க்க கூடியதாகவும், மற்றொன்று மிகவும் மோசமானதாகவும் இருக்கும் என்பதை உணர வேண்டும்.  அசிடிட்டியை பொருத்தவரை நெஞ்சு பகுதியில் ஏற்படுகின்ற அசௌகரியம் குறிப்பாக மேல் வயிற்றில் எரிச்சல் உணர்வு ஏற்படும். அதன் பிறகு வாயில் புளிப்பு அல்லது வழக்கத்திற்கு மாறான கசப்பு சுவை உண்டாகும். மேலும் அசிடிட்டி பிரச்சினையில் இறுதியாக  வயிற்றில் இருக்கக்கூடிய உணவில் சிறிதளவு மீண்டும் வாய்க்கு வந்து சேரும்.


 ஹார்ட் அட்டாக்கை பொறுத்தவரை நெஞ்சை யாரோ பிழிவது போல ஒரு வித வலி அல்லது நெஞ்சு பகுதியில் அதிக அழுத்தத்துடன் கூடிய வலி உண்டாகும். நெஞ்சு பகுதியில் தொடங்கிய வலியானது கழுத்து, தாடை மற்றும் முதுகு போன்றவற்றிற்கு பரவுவது ஹார்ட் அட்டாக்கின் முக்கியமான ஒரு அறிகுறி. வயிறு வலி, மூச்சு விடுவதில் சிரமம், குளிர்ந்த வியர்வை மற்றும் மயக்கம் போன்றவை ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான பிற அறிகுறிகள். இதயத்திற்கு போதுமான ரத்த ஓட்டம் கிடைக்காததால் நெஞ்சில் ஒருவித இறுக்கம் மற்றும் வலி ஏற்படுவது ஆஞ்சினா என்று அழைக்கப்படுகிறது. உடற்பயிற்சிக்கு பிறகு ஏற்படக்கூடிய நெஞ்சு வலி பெரும்பாலும் ஹார்ட் அட்டாக் காரணமாக ஏற்படலாம்.

மரணம் மாரடைப்பு நெஞ்சுவலி


ஹார்ட் அட்டாக்கை போல தோன்றக்கூடிய பிற நெஞ்சு அசௌகரியங்கள் : அசிடிட்டி தவிர உணவுக்குழாயில் ஏற்படக்கூடிய ஒரு வித தசை சுளுக்கு காரணமாகவும் நெஞ்சு பகுதியில் வலி ஏற்படலாம். பித்தப்பையில் நோய்களை அனுபவித்து வரும் நபர்களுக்கு ஏற்படும் வலி ஹார்ட் அட்டாக் போன்ற உணர்வை கொடுக்கலாம்.உடற்பயிற்சி அல்லது மன அழுத்தம் ஏற்பட்ட பிறகு உங்களுக்கு நெஞ்சு பகுதியில் வலி ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகலாம்.   நெஞ்சில் தொடங்கிய வலியானது கைகள், வாய் மற்றும் முதுகு பகுதிக்கு நகரும் பொழுது நிச்சயமாக உங்களுக்கு மருத்துவ உதவி தேவை. இதைத்தவிர உங்களுக்கு ஏற்பட்டுள்ள வலி என்ன என்பதை   புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகலாம்.   

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web