இவையெல்லாம் ரத்தசோகையின் அறிகுறிகள் ... அலட்சியப்படுத்தாதீங்க!!

 
ரத்த சோகை

உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் நம்மால் ஆக்டிவ்வாக எந்த வேலையும் செய்ய முடியாது. எல்லா ஊட்டச்சத்தும் சரிவிகித அளவில் சரியாக இருக்க வேண்டியது அவசியம். ஊட்டசத்து குறைபாடுகள் ஏற்பட்டால், அது உடலில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி விடும். அதிலும் இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டல் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.   இரத்த சோகையை ஏற்பட்டு   உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.  இரும்புச் சத்துக் குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே.  

நெஞ்சுவலி

பெண்கள் அடிக்கடி  ஹீமோகுளோபினை சரிபார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமே.  இதனால் பெண்களுக்கு  பொதுவாகவே உடல் ஆற்றல் , நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச் செய்யும்.  இரும்புச்சத்து குறைபாட்டால் முதலில் ஏற்படுவது உடல் சோர்வு தான். எப்போதும்  உடல் ஆற்றல் முழுவதுமாக வற்றி  எப்போதும் சோர்வாகவும், சோம்பேறித் தனமாகவும் இருக்கும்.  செய்ய வேண்டும் என்று முற்பட்டாலும் உடல் அதற்கு ஒத்துழைக்காது. சருமம் வெளிறி அல்லது மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால்  இரும்புச் சத்துக் குறைபாடேக் காரணம்.  

இரும்புச்சத்து

படிக்கட்டு ஏறினால் மூச்சு வாங்குதல், நடந்தால் மூச்சு வாங்குதல் என கொஞ்சம் சிரமப்பட்டு  வேலை செய்தாலும் மூச்சு வாங்குகிறது எனில் அலட்சியப்படுத்த வேண்டாம்.  அதே போல் இதயத்துடிப்பு வேகமாக இருந்தாலும் அதற்கும்  இரும்புச் சத்துக் குறைபாடுதான் காரணம்.  ஒரே  இடத்தில்  உட்கார்ந்திருந்தால் சிறிது நேரத்திலேயே  உடனே கால் மரத்து போகும். கால்கள் ஷாக் அடித்ததைப் போல் இருக்கும். இவை வழக்கமாக ஏற்படுகிறது எனில் அலட்சியப்படுத்த வேண்டாம்  . உடனே மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை  எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமே.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web