அதிக வாங்குபவர்களைக் கொண்ட இந்த மூன்று பங்குகள்...வாங்கலாமா விற்கலாமா முடிவு உங்கள் கைகளில் !

 
வோடோபோன்

இன்டஸ் டவர்ஸ் லிமிடெட், வோடபோன் ஐடியா லிமிடெட் மற்றும் பிரைட்காம் குரூப் லிமிடெட் ஆகியவை நேற்று பிஎஸ்இ-யின் முதல் தொடக்க அமர்வில் முதலிடம் பிடித்தன. ஆனால் இன்றைய வர்த்தகத்தில் எவ்வித ஏற்றமும் இன்றி வர்த்தகத்தை தொடங்கி இருக்கின்றன.

S&P BSE 100 ல் வர்த்தகமாகும் நிறுவனமான Indus Towers Ltd,நேற்று 10 சதவீதம் உயர்ந்து ஒவ்வொன்றும் ரூபாய் 157.65க்கு வர்த்தகமானது. கடந்த வாரம், நிறுவனம் வணிக காகிதத்தை திருப்பிச் செலுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

இந்தஸ் டவர்

எஸ்&பி பிஎஸ்இ 200 ல் வர்த்தகமாகும் நிறுவனமான வோடபோன் ஐடியா லிமிடெட் 9.87 சதவீதம் உயர்ந்து ஒவ்வொன்றும் ரூபாய் 7.57க்கு வர்த்தகமானது. நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட குறிப்பிடத்தக்க அறிவிப்பின் காரணமாக இந்த விலை உயர்வு காணப்பட்டது. ஸ்பெக்ட்ரம் ஏலத் தவணைகள் மற்றும் AGR நிலுவைத் தொகைகளை ஒத்தி வைப்பது தொடர்பான வட்டியின் NPVயை இந்திய அரசாங்கத்திற்கு வழங்க வேண்டிய பங்குகளாக மாற்றுமாறு இந்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்தோடு நிறுவனத்திற்கும் உத்தரவிட்டுள்ளது.

ப்ரைட்காம்

S&P BSE 500ல வர்த்தகமாகும் நிறுவனமான Brightcom Group Ltd, 8.39 சதவீதம் உயர்ந்து ஒவ்வொன்றும் ரூபாய் .29.70க்கு வர்த்தகமானது. சனிக்கிழமையன்று, நிறுவனம் அதன் Q3FY23 முடிவுகளை அறிவித்தது. எக்ஸ்சேஞ்ச் தாக்கல் செய்த அறிக்கைப்படி, நிறுவனம் வலுவான காலாண்டில் பதிவாகியுள்ளது, ஒருங்கிணைந்த வருவாய் ரூபாய்  2865.17 கோடி மற்றும் PAT ரூபாய்  543.93 கோடி FY22-23 Q3ல் அதிகரித்தது காரணமாக அமைந்தது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த தொழில் அதிக லாபம் தரும்

From around the web