தேவர் ஜெயந்தி... சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அக்.31 வரை 144 தடை உத்தரவு... டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

 
டாஸ்மாக்

அக்டோபர் 30ம் தேதி பசும்பொன் கிராமத்தில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதைப் போலவே மருதுபாண்டியர் குருபூஜை கடந்த 24ம் தேதி நடைபெற்ற நிலையில், அக்டோபர் 31ம் தேதி வரையில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேவர் குருபூஜை

அக்டோபர் 30ம் தேதி தேவர் ஜெயந்தி விழாவிற்கு பசும்பொன் கிராமத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் பங்கேற்று  மரியாதை செலுத்துவதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள், சமூக அமைப்பினர் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் பசும்பொன் கிராமத்தில் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராமநாதபுரம் 144

இந்நிகழ்வு காரணமாக மக்கள் திரள்களை கட்டுப்படுத்தவும், சட்டம்-சமாதானத்தை நிலைநிறுத்தவும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டத்திலும், ராமநாதபுரம் மாவட்டத்திலும் வரும் அக்டோபர் 31ம் தேதி வரை 163(1) சட்டத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!