இன்று பௌர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் இது தான்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி வருகிறது என்றாலும் ஒவ்வொரு பௌர்ணமி வழிபாட்டுக்கும் ஒரு சிறப்பு உண்டு. இந்நாட்களில் சிவ அம்பிகை ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக சிவனடியார்களால் வழிபடப்பட்டு வரும் தலம் திருவண்ணாமலை. இங்கு அமைந்துள்ள மலையே சிவபெருமானாக வழிபடப்பட்டு வருகிறது.இதனால் மலையை வலம் வருவதை பக்தர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வர். இந்நிலையில் புரட்டாசி மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதன்படி பௌர்ணமி இன்று செப்டம்பர் 28ம் தேதி வியாழக்கிழமை மாலை 6.47 மணிக்கு தொடங்கி நாளை மறுநாள் 29ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.34 மணிக்கு நிறைவடைய உள்ளது.

எனவே இன்று இரவு கிரிவலம் செல்ல உகந்தது என கோவில் நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பௌர்ணமி கிரிவலமானது விடுமுறை தினத்தில் வருவதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...
