கோகுலாஷ்டமி கொண்டாட உகந்த நேரம் இது தான்!!

ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் தேய்பிறை அஷ்டமி திதியில் அவதாரம் எடுத்தவர் பகவான் கிருஷ்ணன். நடப்பாண்டில் கிருஷ்ண ஜெயந்தி நாளை செப்டம்பர் 06 ம் தேதி உலகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. கிருஷ்ணரின் 5250வது பிறந்தநாள் என கூறுகின்றன நமது புராணங்கள் . : ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரம் உதித்த போது அஷ்டமி திதி நாளில் நள்ளிரவில் அவதரித்தார் கிருஷ்ணன். கிருஷ்ண அவதாரம் கம்ச அசுர வதத்திற்காக மட்டுமல்ல. பகவத் கீதையை போதித்து அதன் மூலம் மண்ணுலக மக்களை ரட்சிக்க வந்தார்.
அந்த வகையில் நடப்பாண்டில் கிருஷ்ண ஜெயந்தி ரோகிணி நட்சத்திரம் செப்டம்பர் 6 ம் தேதி காலை 09.20 முதல் செப்டம்பர் 7ம் தேதி காலை 10.25 வரை நீடிக்கிறது. கிருஷ்ண ஜெயந்தி விழாவை இரவு நேரத்தில் கொண்டாடுவதுதான் சிறப்பு. கிருஷ்ணர் இரவில்தான் பிறந்தார் என்பதால் பூஜையை மாலையில் தான் செய்ய வேண்டும். ஆவணி மாதத்தின் அஷ்டமி திதி செப்டம்பர் 6ம் தேதி மாலை 3.37 முதல் செப்டம்பர் 7 ம் தேதி வியாழக்கிழமை அதிகாலை 4.14 மணி வரை நீடிக்கிறது. அதே போல் ரோகிணி நட்சத்திரம் செப்டம்பர் 6 ம் தேதி காலை 9.20 மணிக்கு தொடங்கி செப்டம்பர் 7 ம் தேதி காலை 10.25 மணிக்கு முடிவடைகிறது.
பூஜை செய்ய நல்ல நேரம்: செப்டம்பர் 6 ம் தேதி மாலை 4.45 மணி முதல் இரவு 7.30 மணி வரை புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் கிருஷ்ண ஜெயந்தி நாளில் பூஜை செய்து கண்ணனை வணங்கினால் தனது பிஞ்சு பாதத்தில் கோலம் போட கண்ணன் பிறப்பான் என்பது ஐதீகம். கோகுலாஷ்டமி நாளில் கிருஷ்ணருக்கு பிடித்த முறுக்கு, சீடை, அதிரசம், வெண்ணெயில் செய்த பலகாரங்களைப் படைத்து பூஜை செய்தால் வேண்டிய வரம் அருள்வான் கிருஷ்ணன் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!