ஆம்ஸ்ட்ராங் போட இதுதான் சரியான நேரம்.. இன்ஃபார்ம் கொடுத்த ஆற்காடு சுரேஷ் உறவினர் பிரதீப்!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த படுகொலை தொடர்பாக மறைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள், ராமு, திமுக நிர்வாகி மகன் சதீஷ், அதிமுக நிர்வாகி மற்றும் வழக்கறிஞர் மலர்க்கொடி, தமாகாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹரிஹரன், பாஜகவின் அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் உள்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் என்பவரை போலீசார் என்கவுன்டர் செய்தனர். மேலும், கைதான ஹரிஹரன் கொடுத்த தகவலின்படி, வெங்கட்டூர் கூவம் ஆற்றில் வீசப்பட்ட செல்போன்களை போலீஸார் மீட்டுள்ளனர்.
இந்த வழக்கில் 3 நாள் போலீஸ் காவலுக்கு பிறகு பொன்னை பாலு, ராமு, அருள் ஆகியோர் நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், கொலையாளிகளை ஒன்றிணைத்த ஹரிஹரனிடம் தொடர்ந்து 5வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று மாலை விசாரணைக்கு பின் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்.
இதற்கிடையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மாத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவா நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொரு நபர் பிரதீப் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. இதில் பெரம்பூர் திருநாவுக்கரசு தெருவைச் சேர்ந்த பிரதீப் (28). சில காலம் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்தார்.பிரதீப் ஆம்ஸ்ட்ராங்கின் அசைவுகளை உன்னிப்பாக கவனித்து அவர்களுக்கு தகவல் அளித்து வந்துள்ளார்ர். குறிப்பாக, பெரம்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டிற்கு எப்போது செல்வார், எங்கு நின்று கண்காணிப்பார், கூட யார் வருவார்கள், துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் உள்ளனவா என, ஆம்ஸ்ட்ராங், அருளிடம் அவ்வப்போது தகவல் தெரிவித்து வந்துள்ளார்.
இதன் மூலம் சம்பவத்தன்று ஆம்ஸ்ட்ராங்கைச் சுற்றி வெகு சிலரே இருந்தனர். முதலில் பிரதீப் தனது தனிப்பட்ட செல்போன் மூலம் வழக்கறிஞர் அருளை அழைத்தார். பிரதீப் ரூட் கொடுத்த தகவலின் பேரில் ஆம்ஸ்ட்ராங் கொலை அரங்கேறியது. இதையடுத்து, செம்பியம் போலீஸார், பிரதீப் மீது வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைத்தனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா