காதல் மனைவி நிர்வாண வீடியோ.. நண்பர்களுக்கு அனுப்பி வைத்த கொடூர கணவன்!

 
வீடியோ

சேலம் மாவட்டம் ஏற்காடு செந்திட்டு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (23). இவரும், சேலம் அயோத்தியாப்பட்டினம் அருகே உள்ள கரிப்பட்டியை சேர்ந்த 23 வயது பெண்ணும் காதலித்து வந்தனர். கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண் செந்தில் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஏற்காட்டில் காதல் கணவருடன் குடும்பம் நடத்தி வந்தார். ஆனால், கடந்த 3ம் தேதி இளம்பெண் தனது பெற்றோரை தொடர்பு கொண்டு தான் குப்பனூரில் இருப்பதாக தெரிவித்தார்.

பெற்றோர்கள் அங்கு சென்று விசாரித்தபோது கணவன் வீட்டில் இருந்து தெரியாமல் ஓடி வந்ததாக தெரிவித்தார். மேலும், தனது காதல் கணவர் செந்தில், தன்னை நிர்வாணமாக செல்போனில் படம் பிடித்து நண்பர்களுக்கு அனுப்பியதாகவும், இதனால் அவருக்கு தெரியாமல் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து சிறுமியின் பெண்ணின் பெற்றோர் காரிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து காரிப்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில், செந்தில் தனது மனைவியை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பியதும், தன்னுடன் குடும்பம் நடத்த வரவில்லை என்றால் அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியதும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர் மீது காரிப்பட்டி போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து செந்திலை பிடிக்க தனிப்படை போலீசார் ஏற்காட்டில் முகாமிட்டுள்ளனர். திருமணமான 15 நாட்களிலேயே காதலித்து திருமணம் செய்து கொண்டு இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!