3 நாட்கள் தொடர் விடுமுறை... ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு!
தமிழகத்தில் நாளை செப்டம்பர் 14ம் தேதி சனிக்கிழமை மாதத்தின் 2 வது சனிக்கிழமை விடுமுறை, ஞாயிற்றுக்கிழமை , அடுத்த நாள் செப்டம்பர் 16ம் தேதி திங்கட்கிழமை மிலாடி நபி விடுமுறை. அந்த வகையில் 3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக சிறப்பு ரயில்கள் , சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் ஊருக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கு குறைந்தபட்சம் ரூ.1,900 முதல் அதிகபட்சம் ரூ.4,000 வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கோவை செல்ல குறைந்தபட்சம் ரூ.2000 முதல் அதிகபட்சம் ரூ.4,500 வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
