பீஹாரில் ஜன் சுராஜ் வேட்பாளர்கள் மூவர் மனு வாபஸ் ... பாஜக அச்சுறுத்தல் என பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு!

 
பீஹார்

பீஹாரில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ஜன் சுராஜ் கட்சியின் மூன்று வேட்பாளர்கள் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு பாஜக அச்சுறுத்தலே காரணம் என கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார். பிஹாரில் வரும் நவம்பர் 6 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.

ஜன் சுராஜ் வேட்பாளர்களான முதுர் ஷா, சத்ய பிரகாஷ் திவாரி மற்றும் சசி சேகர் சின்ஹா ஆகியோர் தங்களது வேட்புமனுவை திரும்பப் பெற்றுள்ளனர். இதுகுறித்து பிரசாந்த் கிஷோர் கூறியதாவது, “பாஜக கடந்த சில ஆண்டுகளாக ஆட்சியைப் பிடிக்கும் மனநிலையை மக்களிடையே உருவாக்கி வருகிறது. ஆனால் ஜன் சுராஜ் எனும் புதிய கட்சியின் வளர்ச்சியை கண்டு தேஜச்வி யாதவ் தலைமையிலான கூட்டணி அச்சத்தில் உள்ளது. எங்கள் வேட்பாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து மனுவை வாபஸ் பெற வைத்துள்ளனர்,” என்றார்.

அவர் மேலும் கூறியதாவது, “பாஜக எப்போதும் லாலுவின் ஆட்சி மீண்டும் வரும் என கூறி மக்களை அச்சுறுத்துகிறது. ஆனால் இம்முறை மக்களுக்கு மாற்று வாய்ப்பாக ஜன் சுராஜ் உள்ளது. தனாபூர் வேட்பாளர் முதுர் ஷாவை பாஜக மிரட்டியுள்ளனர். இதனால் அந்தப் பகுதி மக்கள் பாஜகக்கு வாக்களிக்க மாட்டோம் என முடிவு செய்துள்ளனர். எத்தனை வேட்பாளர்களை இழுத்தாலும், நாங்கள் கடுமையாக போராடுவோம்; பிஹாரில் மாற்றம் வருவது உறுதி,” என்று பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தினார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!