மாஸ் வீடியோ... Thug Life இன்று முதல் படப்பிடிப்பு இனிதே ஆரம்பம்... ரசிகர்கள் கொண்டாட்டம்... !

 
thug life

அந்தா , இந்தா எனக் கூறிக்கொண்டிருந்த இயக்குநர் மணிரத்தினம்  இதோ இன்று தொடங்கிவிட்டார் தமது அடுத்த படத்தின் படப்பிடிப்பை. பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் 'தக் லைஃப்'இந்த படத்தில் த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் பல முண்ணனி நட்சத்திரங்கள்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்



 

.மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கான இசை  ஏ.ஆர்.ரகுமான்.  ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவில்  இப்படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

thug life

 இந்நிலையில், 'தக் லைஃப்'  படக்குழு  புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. அத்துடன்  இந்த படக்குழு மாஸான வீடியோ ஒன்றையும்  வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில்  'இன்று முதல் படப்பிடிப்பு இனிதே ஆரம்பம்' என குறிப்பிட்டுள்ளது. கமல் ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி அதகளப்படுத்தி வருகின்றனர்.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web