சூறைக்காற்று, இடி , மின்னலுடன் மழை... விமான சேவை கடும் பாதிப்பு!

 
விமானம் விமான நிலையம்

 தமிழகத்தின் தலைநகர் சென்னையின் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில்  பரவலாக நல்ல மழை பெய்தது. சென்னை சென்ட்டிரல், எழும்பூர், புரசைவாக்கம், சேத்துப்பட்டு, அமைந்தகரை, பாரிமுனை, மதுரவாயல், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, வானகரம், திருவேற்காடு, அம்பத்தூர், அனகாபுத்தூர், ஆவடி உட்பட பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.  

விமானம்

சூறைக்காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை செய்ததால் விமான நிலையத்தில் விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் 9 வருகை விமானங்கள் மற்றும் 10 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 19 விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விமானங்கள் வானில் வட்டமடிக்க அறிவுறுத்தப்பட்டன. வானிலை சீரானதும், வானில் வட்டமடித்துக் கொண்டிருந்த விமானங்கள் ஒவ்வொன்றாக பத்திரமாக தரையிறங்கின.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web