துணிவு பட நடிகர் காலமானார்... திரையுலகில் பெரும் சோகம்!

 
ரிதுராஜ்சிங்


தமிழ் திரையுலகில் “தல” ஆக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அஜீத் நடிப்பில் கடந்தவருடம் வெளியான படம் துணிவு. இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.  இந்த படத்தில்  ரித்துராஜ் சிங் நடிப்பும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  இவர் தொலைக்காட்சி தொடர்கள்,  பாலிவுட் படங்கள், வெப் சீரிஸ்களிலும் நடித்து வந்தார்.  

ரிதுராஜ்சிங்

இவர் துணிவு படத்தில் வில்லன்களுள் ஒருவராக நடித்திருந்தார்.  கிளைமாக்ஸ் காட்சியில் வரும் 3 வில்லன்களில் உள்ளாடையுடன் அஜித்திடம் சிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் ஏற்கனவே கணைய பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவருக்கு வயது 59.    கணையப் பிரச்சனை  காரணமாக தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2   வார காலம் மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். உடல் தேறியதும்  டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.  ஆனாலும் நேற்று முதலே இவர் உடல்நிலை கொஞ்சம் சோர்வாக இருந்ததாகக் கூறினார்.  

ரிதுராஜ்சிங்
அதைத்தொடர்ந்து மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  ரித்துவுக்கு   மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்துவிட்டது.  இவரது திடீர் மறைவு திரையுலகில்  கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து  இவருடைய மரணத்திற்கு தற்போது திரை பிரபலங்களும் ரசிகர்களும் தங்களுடைய ஆழ்ந்த இரங்கல்களை பதிவிட்டு  வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு 19 வயதான சுஹானி பட்னாகர் மரணம் அடைந்தார். அந்த இழப்பின் சுவடு மறையும் முன்னே மீண்டும் ஒரு உயிரிழப்பு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!