“தீபாவளிக்கான சிறப்பு ரயில்களிலும் டிக்கெட் கிடைக்கலை”.. முன்பதிவில்லா ரயில்களை இயக்க பொதுமக்கள் கோரிக்கை!

 
ரயில்

சொந்த ஊரில் தீபாவளியைக் கொண்டாட வசதியாக பயணிகளின் நலன் கருதி சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்குச் செல்வதற்காக சென்னையில் இருந்து புறப்படும் ரெயில்களில் பெரும் கூட்ட நெரிசல் நிலவுகிறது.

ரயில் கூட்டம் வெளியூர் செண்ட்ரல்

தீபாவளியை முன்னிட்டு, சென்னை–திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, செங்கோட்டை, கோவை, பெங்களூர், திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் மொத்தம் 15 சிறப்பு ரெயில்களை ரெயில்வே துறை அறிவித்திருந்தது.

ஆனால், இந்த சிறப்பு ரெயில்களின் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிட்டன. இதனால் பலர் காத்திருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்; சில ரெயில்களில் காத்திருப்பு எண் 100-ஐ கூட தாண்டியுள்ளது.

ரயில்

ஆம்னி பேருந்துகளில் கட்டணம் வழக்கத்தை விட நான்கு மடங்கு உயர்ந்துள்ளதால், குடும்பத்துடன் பயணம் செய்ய விரும்புவோர் பெரும்பாலும் ரெயிலைத் தேர்வு செய்து வருகின்றனர். இதனால் தட்கல் முறையிலும் டிக்கெட் பெற முடியாமல் பயணிகள் சிரமம் அடைகின்றனர்.

இதனையடுத்து, தீபாவளியை முன்னிட்டு மேலும் சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும் என்றும், குறைந்தது சில ரெயில்கள் முன்பதிவு இல்லாத பொதுப் பயணிகளுக்காக இயக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் ரெயில்வே துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?