இன்று இரவு 8 மணிக்கு உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கான டிக்கெட்கள் விற்பனை!!

 
உலகக்கோப்பை

இந்தியாவில்  அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டித்தொடர் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெற உள்ளது.   இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட   10 அணிகள் கலந்து கொள்கின்றன.   கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணி  ஐசிசி கோப்பையை வெல்லவில்லை என்பது வருந்தத்தக்கது.  

உலகக்கோப்பை

இந்த முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.  ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கிடக்கின்றனர். உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அணிகளும் உலகக்கோப்பை தொடருக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன.  உலகக்கோப்பை தொடருக்கான டிக்கெட் விற்பனை  ஆகஸ்ட்   மாத இறுதியில் தொடங்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

உலகக்கோப்பை டிக்கெட்

உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று இரவு 8 மணிக்கு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  மும்பை  மற்றும் கொல்கத்தாவில் அரையிறுதிப்போட்டியும் , அகமதாபாத்தில் இறுதிப்போட்டியும் நடைபெற உள்ளன . உலகக்கோப்பை இறுதி போட்டிக்கான டிக்கெட்டுக்களை https://tickets.cricketworldcup.com என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தில்   புக் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web