நாடு முழுவதும் டிக் டாக், டெலிகிராம் ஆப்களுக்கு தடை!! பயனர்கள் அதிர்ச்சி!!

 
டிக்டாக் டெலகிராம்

சோமாலியா   சர்வதேச பயங்கரவாத இயக்கமான அல்-கய்தா மற்றும் அதன் ஆதரவு  பயங்கரவாதிகளை சமாளிக்க திணறி வருகிறது. இதற்கு ஒரு முடிவு கட்டும் வகையில் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க ஐக்கிய படைகளின் ஆதரவோடு அல்-ஷபாப் குழுவினருக்கு எதிரான  2ம் கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள சோமாலியா ஆயத்தமாகி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக  சோமாலியாவில்   டிக்டாக், டெலகிராம் மற்றும்  ஆன்லைன் பந்தய செயலி  மூன்றும் நாடு முழுவதும் தடை செய்யப்பட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  

டிக்டாக்

இந்த செயலிகள் மூலம்  பயங்கரவாதத்துக்கான பிரச்சாரம் முன்னெடுக்கப்படுவதாக சோமாலியா அரசு குற்றம்சாட்டியுள்ளது.  ஆகஸ்ட் 24ம் தேதிக்குள் சோமாலியாவில் தடை செய்யுமாறு அந்நாட்டின் தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  அரசு உத்தரவுக்கு உடன்படாத தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு எதிராக தீவிர சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.

அல்கொய்தா
தேசத்தின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் தனியுரிமை பாதிக்கப்படலாம் என்ற அடிப்படையில்  சீன பின்னணியிலான டிக்டாக் செயலிக்கு அமெரிக்கா உட்பட பல  நாடுகளில் அதிருப்தி நிலவி வருகிறது. அமெரிக்காவில் டிக்டாக்கை தடை செய்ய அரசுகள் தயாராக இருந்தபோதிலும், பொதுமக்கள் ஆதரவு காரணமாக டிக்டாக் தடை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  ரஷ்ய பின்னணியிலான டெலகிராம் செயலியும்  இருள் இணையத்தின் நிழலான செயல்பாடுகளுக்கு துணைபோவதாக சமீபகாலமாக  குற்றச்சாட்டுகள் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web