தண்ணீர் லாரிகளுக்கு நேரக்கட்டுப்பாடு!! மீறினால் கடும் எச்சரிக்கை!!

 
தண்ணீர் லாரி

 
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் எந்நேரமும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் அளவுக்கதிகமான  தண்ணீர் லாரிகளும் போக்குவரத்தில் கலந்து கொள்கின்றன.  இதனால், சென்னையில் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.   கடந்த வாரம் தண்ணி லாரி மோதி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தண்ணீர் லாரி

இந்நிலையில், தண்ணீர் லாரியால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்க விடுக்கப்பட்டன. இதன் அடிப்படையில்  தண்ணீர் லாரிக்கு நேர கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர். அதாவது, காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தண்ணீர் லாரிகள் சென்னை நகருக்குள் வரக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் லாரி

இந்த நேர கட்டுப்பாட்டையும் மீறி தண்ணீர் லாரிகள் சென்னை நகருக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற நேரங்களில்  அதை தடுத்து நிறுத்தும் படி குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த நேர கட்டுப்பாட்டினை தீவிரமாக கடைபிடிக்கும் படியும் மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web