ஆயுத பூஜை, விஜய தசமி பூஜைகளுக்கு உகந்த நேரங்கள்!
இன்று அக்டோபர் 1ம் தேதி புதன்கிழமை ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில் பூஜை நேரத்தை தீர்மானித்து நற்பலன்களை பெறலாம் என ஜோதிட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

நல்ல நேரம்
சரஸ்வதி/ஆயுத பூஜை 01-10-2025 (புதன்கிழமை) நேரம்: காலை 9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் (குரு ஹோரை)
பிற்பகல் 01.30 மணிக்கு மேல் 03.00 மணிக்குள் (புத, சந்திர ஹோரை)
மாலை 4.00 மணிக்கு மேல் 5.00 மணிக்குள் (குரு ஹோரை)

விஜய தசமி நாளை அக்டோபர் 2-10-2025 (வியாழக்கிழமை)
நேரம்: காலை 09.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் ( சுக்கிர ஹோரை)
காலை 10.00 மணிக்கு மேல் 11.00 மணிக்குள் (புதன் ஹோரை)
காலை 11.00 மணிக்கு மேல் பிற்பகல் 12.00 மணிக்குள் (சந்திரன் ஹோரை)
பிற்பகல் 1.00 மணிக்கு மேல் 01.30 மணிக்குள் (குரு ஹோரை) குழந்தைகளை பள்ளியில் சேர்க்க, கலை பயில, வித்யாரம்பம், கணிதாரம்பம் செய்ய, மேலோரைக் காண, அனைத்து நல்ல விஷயங்களையும் தொடங்க உகந்த நேரம் காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணி வரை. இது குளிகை நேரமாக இருப்பதால், இந்த காலத்தில் செய்யும் அனைத்துச் செயல்களும் பல மடங்கு விரிவடையும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
