திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா... நாளை முதல் சரக்கு வாகனங்களுக்கு முழு தடை!
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா, 22.10.2025 அன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கி, 27.10.2025 அன்று சூரசம்ஹார நிகழ்வு மற்றும் 28.10.2025 அன்று திருக்கல்யாண நிகழ்வுடன் நிறைவடைகிறது.திருவிழாவை முன்னிட்டு, 26 மற்றும் 27 அக்டோபர் நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, திருச்செந்தூர் பகுதியின் முக்கிய வழித்தடங்களில் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கடத்தும் வாகனங்களைத் தவிர, மேற்கூறிய நாட்களில் திருச்செந்தூர் வழியாக செல்லும் அனைத்து சரக்கு வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருநெல்வேலி, உவரி, சாத்தான்குளம் போன்ற பகுதிகளிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வாகனங்களுக்கும் ஒத்த தடை அமல் செய்யப்பட்டுள்ளது. மாற்று வழித்தடங்களாக, ஆறுமுகநேரி, குலசேகரன்பட்டினம், உடன்குடி, திசையன்விளை, பரமன்குறிச்சி, காயாமொழி, ராணிமஹாராஜபுரம் மற்றும் நல்லூர் ‘V’ ஜங்ஷன் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, உவரி, குலசேகரன்பட்டினம் வழியாக திருச்செந்தூரை கடந்து செல்லும் வாகனங்களும், திருச்செந்தூர் வழி மறுக்கப்பட்டால் மாற்று வழியாக திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ ஜங்ஷன், ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி வழியாக செல்லலாம்.தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, அனைத்து வாகன ஓட்டிகளும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை கடைபிடித்து, பாதுகாப்பு ஏற்பாடுகளில் முழுமையாக ஒத்துழையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
