திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் மாற்றம்... தமிழக அரசு உத்தரவு!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையர் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலராக பணிபுரிந்து வந்த சூரிய நாராயணன், சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

இவருக்கு பதிலாக மயிலாடுதுறை இணை ஆணையாளராக பணிபுரிந்து வந்த கே.சோமு திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் மற்றும் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோல் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில் உட்பட 5 இணை ஆணையர்களை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
