திருப்பதி திருமலையில் பிப்ரவரி 16ம் தேதி ரத சப்தமி விழா... ஏழு பாவங்களையும் போக்கும் பெருவிழா!

 
ரத சப்தமி

ஏழு ஜென்ம பாவங்களையும் போக்கும் ரத சப்தமி பெருவிழாவையொட்டி திருப்பதி திருமலையில் இம்மாதம் 16ம் தேதி மினி பிரமோற்சவம் விமரிசையாக நடைபெற உள்ளது.இதற்காக திருமலைக்கு திரளான பக்தர்கள் வருவதற்கு தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது. 

ரத சப்தமி

ரத சப்தமி அன்று 7 வாகனங்களில் மலையப்பசாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். அன்றைய தினம் அதிகாலை 5.30 மணி முதல் 8 மணி வரை சூரிய பிரபை வாகனத்திலும், 9 மணி முதல் 10 மணி வரை சின்னசேஷ வாகனத்திலும், 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனத்திலும், மதியம் ஒரு மணி முதல் 2 மணி வரை  அனுமந்த வாகனத்திலும் மாட வீதிகளில் மலையப்பசாமி வலம் வந்து அருள் பாலிக்கிறார். 

தொடர்ந்து மதியம் 2 மணி முதல் 3 மணி வரை சக்கர ஸ்நானம், மாலை 4 முதல் 5 மணி வரை கல்ப விருட்ச வாகனத்திலும், 6 மணி முதல் 7 வரை சர்வபூபால வாகனத்திலும், இரவு 8 மணி முதல் 9 மணி வரை  சந்திரபிரபை வாகனத்திலும் உலா வருகிறார். 

ரத சப்தமி

ரதசப்தமி அன்று கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்ட கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம் மற்றும் சஹஸ்ர தீப அலங்கார சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. அதே சமயம் சுப்ரபாதம், தோமாலா மற்றும் அர்ச்சனை தனிமையில் செய்யப்படுகின்றன என திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web