15 நாட்களுக்கு திருப்பதி ரயில் சேவை ரத்து.. பயணிகள் அவதி!!

 
ரயில்

 சென்னையில் இருந்து இந்தியாவின் பல மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருப்பதிக்கும் தினசரி ரயில்சேவை இயக்கப்பட்டு வருகிறது. அந்த வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ரயில்கள் இயக்கப்படாது என தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்  “சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருப்பதிக்கு தினமும் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன .

திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் பெற புதிய நடைமுறை!!

ரேணிகுண்டா பகுதியில் மேற்கொள்ளப்பட உள்ள தண்டவாள மேம்பாட்டுப் பணி காரணமாக செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 12ம் தேதி வரை இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து தினமும் காலை 6.25 மணிக்கு புறப்படும் சப்தகிரி விரைவு ரயில், பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் திருப்பதி விரைவு ரயில், மாலை 4.35 மணிக்கு புறப்படும் கருடாத்திரி விரைவு ரயில் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 12ம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

ரயில்


 இதே போன்று மறு மார்க்கத்தில் திருப்பதியில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்படும் கருடாத்திரி விரைவு ரயில், காலை 10.10 மணிக்கு   சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் மற்றும் மாலை 6.05 மணிக்கு புறப்படும் சப்தகிரி விரைவு ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web