சபரிமலையில் திருப்பதி மாடல் வரிசை முறை தரிசனம்... தேவசம்போர்டு அதிரடி..!!

 
சபரிமலை

சபரிமலை நவம்பர் 16ம் தேதி முதல் நடை திறக்கப்பட்டு  கார்த்திகை 1 முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி   சாமி தரிசனம் செய்ய 17 மணி நேரம் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.  பக்தர்கள் வருகை மிகவும் அதிகமாக இருப்பதால் , சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை நிலவி வருகிறது. பிற்பகல் 1 முதல் 4 மணி வரை நடை அடைக்கப்படுகிறது. ஒரு மணி நேரம் முன்பாக அதாவது பிற்பகல் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டால் இன்னும் உடனடியாக சாமி தரிசனம் செய்யலாம் என பக்தர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

சபரிமலை

 தற்போது மண்டல பூஜைக்காக ஆன்லைன் மூலம் தரிசனத்துக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். இது தவிர நிலக்கல் உட்பட   உடனடி முன்பதிவு மையங்களிலும் ஏராளமானோர் பதிவு செய்து சாமி தரிசனம் செய்கின்றனர்.  பக்தர்கள் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், அவர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய தேவசம்போர்டு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன்படி திருப்பதி கோவிலை போன்று சபரிமலையில் வரிசை முறையை பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இந்த நடவடிக்கை சோதனை முறையில் செயல்படுத்தி பார்க்கப்பட்டது. அதன்படி மரக்கூட்டம் மற்றும் சரம்குத்தி இடையே மூன்று வரிசை வளாகங்கள்  மூலம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.  அந்த வரிசைகளில் பக்தர்கள் வரிசையாக ஒழுங்குபடுத்தி நிறுத்தப்பட்டனர்.

சபரிமலை ரயில்

பின்பு அந்த வரிசைகளின்படி பக்தர்கள் வருவதற்கான உத்தரவு சன்னிதானத்தில் இருந்து  பிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகு அந்த வழிகள் திறக்கப்பட்டு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்ட னர்இந்த வரிசை முறை வெற்றி பெற்றுள்ளதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது. அதன்படி சபரிமலையில்  பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமாக உள்ள நாட்கள் மற்றும் நேரங்களில் இந்தமுறை அமல்படுத்தப்படும் என தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த முறை பக்தர்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web