பைனான்சியரை பழி வாங்க மகனை கடத்தி கொலை.. கொடூர நபருக்கு ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம்..!

 
பெருமாள்  

பைனான்சியரை பழி  வாங்க  மகனை கடத்தி கொலை செய்த  நபருக்கு  திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் நீதிமன்றம்   நீதிபதி  ஆயுள் தண்டனை  அளித்துள்ளார்.  திருப்பத்தூர்  மாவட்டம்,  ஏலகிரிமலை  அத்தனாவூர்  கிராமத்தை சேர்ந்தவர்  குட்டி.  பைனான்சியரான     இவரிடம்  அதே  பகுதியைச்  சேர்ந்த   பெருமாள்  பத்தாயிரம்  ரூபாய்  கடன்  வாங்கி  உள்ளார்.  அதனை  தர மறுத்ததால்  பெருமாளின்  இரு  சக்கர  வாகனத்தை குட்டி எடுத்துச் சென்றுள்ளார்.

Tirupathur, Tirupathur : திருப்பத்தூர்: ஏலகிரி மலையில் பாம்பு கடித்து  மயங்கி விழுந்த பெண் திருப்பத்தூர் மருத்துவமனையில் அனுமதி | Public App

இதனால், அவரை  பழி  வாங்க   நினைத்த  பெருமாள் குட்டியின்  மகன்  ராகேஷ் குமாரை   2013ம்  ஆண்டு  கடத்தி  சென்று  ஒக்கேனக்கல்  அணையில்  வைத்து  கொலை செய்துள்ளார்.   சந்தேகத்தின்  பேரில் காவல்துறையினர்  பெருமாளை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில்,  தான் கொலை  செய்ததை  ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, இந்த வழக்கு குறித்த  விசாரணை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில்,  வாதிடப்பட்டது.    

Tirupathur, Tirupathur : திருப்பத்தூர்: கூடுதல் அமர்வு நீதிமன்றத்தை, மாவட்ட  முதன்மை நீதிமன்றம் ஆக மாற்றக்கோரி, 4 நாட்களுக்கு வழக்கறிஞர்கள் ...

இந்த வழக்கு விசாரணை இன்று அமர்வுக்கு வந்த நிலையில், சிறுவனை கொலை செய்த குற்றத்திற்காக  பெருமாளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் பத்தாயிரம் அபராதமும் கடத்திய குற்றத்திற்கு ஐந்தாண்டும், பத்தாயிரம் அபராதமும், கட்ட தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனையும் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web