திருவண்ணாமலை கோவிலில் புதிய கட்டுமானம், காம்ப்ளக்ஸ் கட்ட தடை... உயர்நீதிமன்றம் உத்தரவு!

 
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தலம் அருணாச்சலேஸ்வரர் கோவில். இந்த கோவிலின் உள்ளேயும், வெளியேயும் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம்  இடைக்கால தடை விதித்துள்ளது. திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோயில் கோபுரம் முன்பு வணிக வளாகம் கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை  சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தொழில்நுட்ப அறிக்கையை தாக்கல் செய்ய அறநிலையத்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.

திருவண்ணாமலை

அப்போது மனுதாரர் தரப்பில், கோயிலில் கட்டுமானங்கள் மேற்கொள்ளக் கூடாது என ஏற்கனவே  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், 4 ம் பிரகாரத்தில் கியூ காம்ப்ளக்சும், பக்தர்கள் காத்திருப்பு கூடமும் கட்டப்பட்டு வருகிறது என்று கூறி, புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்தார். இவற்றை பார்வையிட்ட நீதிபதிகள், உயர் நீதிமன்றம் வழக்கை விசாரித்து வரும் நிலையில், நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வராமல் கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது. இதற்கான  அவசியம் என்ன? இந்த கட்டுமானங்கள் சுற்றுச்சுவருக்கு பாதிப்பை ஏற்படுத்தாதா என கேள்வி எழுப்பினர். இந்த கட்டுமானங்கள் அமைக்க வேண்டிய அவசியம் என்ன என்பதை விளக்கும் வகையில் ஆவண ஆதாரங்களுடன் விரிவான அறிக்கை அறநிலையத் துறை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது.

திருவண்ணாமலை கிரிவலப் பாதைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி: தமிழக அரசு

அதுவரை 4 ம் பிரகாரத்தில் கியூ காம்ப்ளக்ஸ் மற்றும் பக்தர்கள் காத்திருப்பு கூடம் மட்டுமல்லாமல், கோயிலின் உள்ளேயும், வெளியேயும் எந்த கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அக்டோபர் 5ம் தேதி கோயிலில் ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்து, இதற்கான விசாரணையை அக்டோபர் 16ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?