TNPSC குரூப் 1 முதன்மை தேர்வு... இன்று முதல் நேர்காணல் துவக்கம்... இதை எல்லாம் மறக்காம கொண்டு போங்க!

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்று மார்ச் 26-ம் தேதி முதல் நேர்காணல் நடைப்பெற உள்ளது. குரூப் 1 தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள் மாநிலத்தில் துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட பணியிடங்களில் அமர்த்தப்படுகிறார்கள்.
Posts included in Combined Civil Services Examination-I (Group-I Services) – Notification No. 16/2022 – List for Oral Test
— TNPSC (@TNPSC_Office) March 7, 2024
For details click : https://t.co/2HKoTLWygT pic.twitter.com/2h0skNgzgl
தமிழகம் முழுவதும் மொத்தம் 95 காலியிடங்களுக்கான தேர்ச்சிக்கு இன்று முதல் நேர்காணல் நடைப்பெறுகிறது.
டிஎன்பிஎஸ் சி தேர்வு எழுதியிருந்தவர்கள், தங்களது தேர்தவு முடிவுகளை http://www.tnpsc.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் காணலாம். தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு இன்று துவங்கும் நேர்காணல் மார்ச் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடக்கும் இந்த நேர்காணலுக்கு வருவோர், அனைத்து அசல் கல்வி சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும். இது குறித்து இந்த தேர்வுக்காக ஆன்லைனில் விண்ணப்பித்தபோது அளித்த செல்போன் நம்பர் மற்றும் இமெயில் முகவரிக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!