டிஎன்பிஎஸ்சி குருப் 1 தேர்வுக்கான ரிசல்ட் வெளியீடு... மார்ச் 26ம் தேதி நேர்முகத் தேர்வு!

 
டிஎன்பிஎஸ்சி

தமிழகத்தில்  அரசுப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுகளால் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் அரசு துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உட்பட  குரூப் 1 பதவிக்கான மெயின் தேர்வு ரிசல்ட் இன்று காலையில் வெளியாகியுள்ளது. இவர்களுக்கான நேர்காணல் மார்ச் 26ம் தேதி தொடங்குகிறது   .

டிஎன்பிஎஸ்சி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் துணை கலெக்டர் 18 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர் 26, 13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர்கள், 25 வணிகவரி உதவி ஆணையர்கள், 7 ஊரக மேம்பாடு உதவி இயக்குனர், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உட்பட 95 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு  2022 ஜூலை 21ம் தேதி வெளியிடப்பட்டது. இதில்  முதல்நிலை தேர்வுக்கு 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் இத்தேர்வு 2022 நவம்பர்  19ம் தேதி நடந்தது. 

டிஎன்பிஎஸ்சி

1,90,518 பேர் தேர்வு எழுதிய நிலையில்  முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் கடந்த ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 2162 பேர்   தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான மெயின் தேர்வு  ஆகஸ்ட் 10 முதல் 13ம் தேதி வரை நடத்தப்பட்டது.   இத்தேர்வை 2,113 பேர் எழுதினர். இதில் ஆண்கள் 1333 பேர், பெண்கள் 780 பேர், அடங்குவர்.

இந்நிலையில் குரூப் 1 மெயின் தேர்வுக்கான ரிசல்ட்  டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ   இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.in வெளியிடப்பட்டுள்ளது. மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்முகத்தேர்வு   26ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கிறது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!


From around the web