டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி....?!

 
டிஎன்பிஎஸ்சி

 
தமிழகத்தில்  காலி அரசுப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.   தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி 2 மற்றும் 2ஏ பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வில் கட்டாயத் தமிழ் மொழி தகுதித்தாள் மற்றும் பொது அறிவு ஆகிய இரு தாள்களுக்கும்  பிப்ரவரி  25ம் தேதி   தேர்வு நடத்தப்பட்டது.  கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தேர்வு மற்றும் பொது அறிவுத் தேர்வினை தமிழகம் முழுவதும் 51,000க்கும் மேற்பட்டோர்  எழுதி இருந்தனர். இதற்கான முடிவுகள்   ஏப்ரல் மாதமே வெளியிடப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது.

டிஎன்பிஎஸ்சி

ஆனால், தேர்வு நடத்தப்பட்டு  9 மாதங்களாகியும் இதுவரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2  தேர்வுத்தாள் திருத்தும் பணி  80 விழுக்காட்டிற்கும் மேல் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.  டிசம்பர் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு சுமார் 6,000 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகள்  வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தார்.  

டிஎன்பிஎஸ்சி

இந்த மாதத்தில் ஏற்கனவே 15 நாட்கள் கடந்துவிட்ட  நிலையில், தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த செயலால்  தேர்வாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கேள்வி எழுப்பிவரும் நிலையில் இன்று மாலைக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி  வெளியிடப்படும்  என அமைச்சர் தெரிவித்துள்ளார்.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web