டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு – தகுதி பெற்றோருக்கான கணினி சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 தேர்வில் தகுதி பெற்றோருக்கான கணினி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தேர்வர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில், 2025 ஏப்ரல் 25ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கை எண் 07/2025 அடிப்படையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (தொகுதி–IV) தேர்வின் முடிவுகள் 22 அக்டோபர் 2025 அன்று வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீட்டு விதி, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், வனக் காவலர் மற்றும் வனக் காவலர் (பழங்குடியினர்) போன்ற பதவிகளைத் தவிர்த்து, மற்ற பணிகளுக்கான தகுதி பெற்ற தேர்வர்கள் பட்டியல் இணையதளத்தில் இடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்களது சான்றிதழ்களை 2025 அக்டோபர் 29 முதல் நவம்பர் 7 வரை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தின் ‘One Time Registration Platform’ மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாதவர்கள் அடுத்த கட்ட தெரிவிற்குத் தகுதியற்றவராக கருதப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கான சரிபார்ப்பு விகிதம் 1:3 / 1:2, வனத்துறைப் பணிகளுக்கானது 1:6 என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
