இன்று டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு... தேர்வு அறையில் இவற்றுக்கெல்லாம் அனுமதியில்லை!

 
டிஎன்பிஎஸ்சி

இன்று தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தேர்வு நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் இந்த தேர்வினை 280 பேர் எழுத உள்ளனர்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு (தொழிற்பயிற்சி நிலை-II) (கணினி வழித் தேர்வுகள்) இன்று 16ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல் என இருவேளைகளிலும் நடைபெறவுள்ளது. 

டெட் தேர்வு ஆசிரியர்

தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு எளிதாக சென்றடையும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்கிட தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வர்களுக்கு அவசர மருத்துவ உதவி அளிக்கும் வகையில் ஆம்புலன்ஸ் சேவை தயார் நிலையில் இருக்குமாறு மாவட்ட சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு நாள் தான்... டிஎன்பிஎஸ்சி குரூப் 4 விண்ணப்பிக்க மறந்துடாதீங்க!

தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளவாறு தேர்வு நாளான 16.11.2025 அன்று முற்பகல் 9 மணிக்கும் பிற்பகல் 2 மணிக்கு முன்னரே தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்குள் ஆஜராகிட வேண்டும். உரிய நேரமான முற்பகல் 9 மணிக்கும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் வருகை தரும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

தேர்வு எழுத வரும் தேர்வர்கள் தேர்வுக்கூடத்திற்குள் பேஜர், செல்போன். கால்குலேட்டர், Smart Watch, தகவல்கள் பதிவு செய்யும் மின் சாதனங்கள், குறிப்பேடு, புத்தகங்கள், உறைகள் மற்றும் கைப்பைகள் போன்றவை கொண்டு செல்ல அனுமதி இல்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?