உடல் எடையை குறைத்து ஸ்லிம் ப்யூட்டியாக மாற ....
இன்றைய உடல் உழைப்பில்லா வாழ்க்கை பலரையும் தொப்பையுடன் திரிய வைக்கிறது. உட்கார்ந்த இடத்திலேயே வேலை, அதே இடத்தில் ஆகாரம் அதே இடத்தில் தூக்கம் இவை தான் ஓரளவு பணிபுரியும் இளைஞன் மற்றும் இளைஞியின் வாழ்க்கை முறை. திருமணத்திற்கு பிறகும் பெரும்பாலானவர்கள் வீட்டில் சமைத்து சாப்பிடுவதையோ சிரமப்பட்டு உழைப்பதையோ வேலையாக எடுத்துக் கொள்வதில்லை. வார நாட்களில் ஏசி ரூமில் 10 மணி நேர கணிணி வேலை. பணியிடத்திலேயே அனைத்தும் முடிந்து விடுகிறது. வார இறுதிகளில் ஊர்சுற்றல் பாஸ்ட் புட் உணவு வகைகள். இதனால் தொப்பை 30களிலேயே வரத் தொடங்கி விடுகிறது. தொப்பையை வளரவிட்டு பின் அதை குறைப்பதற்காய் மணிக்கணக்கில் ஜிம்மில் தவம் இருப்பதும் பலரது வாடிக்கையாகி வருகிறது. அதிலும் உடனடியாக தொப்பை குறைய வேண்டும் என்பதிலும் கறாராக இருக்கின்றனர். ஒரே வாரத்தில் உடல் எடை குறைப்பது எப்படி என சமூக வலைதளங்களில் தேடத் தொடங்கி விடுகின்றனர்.
இதற்காக லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கவோ, மணிக்கணக்கில் ஜிம்மில் தவம் இருக்கவோ தேவையில்லை. தினசரி சில நடைமுறைகளை கடைப்பிடித்து வந்தாலே போதுமானது. திரிபலா என்பது கடுக்காய், தான்றிக்காய் மற்றும் நெல்லிக்காய் ஆகிய மூன்று பழங்களின் கலவையே . இந்த திரிபலா பொடி பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. தொப்பையின் கொழுப்பை குறைப்பதற்கு வெதுவெதுப்பான தண்ணீரில் திரிபலா பொடியை கலந்து இரவு தூங்குவதற்கு முன்பு குடிக்க வேண்டும். இது செரிமானத்தை எளிதாக்கி உடல் எடையை குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. அது மட்டுமல்லாமல் திரிபலா பொடியானது ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, வீக்கத்தையும் குறைக்கவல்லது . காலை எழுந்ததும் காபி, டீ குடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் அதை விட்டு அதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கும் பழக்கத்தினை கொண்டு வரலாம். இதனால் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து செரிமானத்தை தூண்டும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் கொழுப்பை உடைத்து பசியை கட்டுப்படுத்தும் அத்துடன் உடலில் உள்ள கெட்ட நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றி வயிற்று உப்புசத்திலிருந்து விடுபடச் செய்யும்.
ஒரு நாளின் ஆரோக்கியத்தையும் சுறுசுறுப்பையும் முடிவு செய்வது அன்றைய தினத்தின் காலை ஆகாரமே. இரவு முழுவதும் காலியாக கிடக்கும் வயிற்றுக்கு ஆரோக்கியமான காலை உணவு முக்கியமானது. ஆரோக்கியம் , சுறுசுறுப்புடன் நமது உடல் எடையை நிர்ணயிப்பதிலும் காலை உணவே பெரும்பங்கு வகிக்கிறது. உடல் எடை மற்றும் தொப்பை அதிகம் இருப்பவர்கள் குறிப்பிட்ட சில காலை உணவுகளை எடுத்துக் கொண்டால் படிப்படியாக உடல் எடை குறைவதை அனுபவப்பூர்வமாக உணரலாம்.
முட்டையில் நிறைந்திருக்கும் வைட்டமின்களும், புரதங்களும் உடனே பசியை போக்கவல்லவை. காலை உணவாக முட்டையை சாப்பிடுவதால் உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும். ஆனால் பொதுவாக முட்டையுடன் பிரட் ஜாம், கெட்ச் அப், மயோனைஸ் சேர்த்து எடுத்து கொள்கிறோம் அது தவறு. அப்படி சேர்த்து கொண்டால் உடல் எடை அதிகரித்துக் கொண்டே தான் போகும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர் உடலியல் மருத்துவர்கள். தயிரில் நிறைந்துள்ள கால்சியம் குடலை சுத்தம் செய்ய உதவுகிறது. இதனை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் எடை குறையத் தொடங்கும்.
அரிசி மற்றும் கோதுமை ரவை உப்புமாவில் அதிக நார் சத்து நிறைந்துள்ளது. இதனை காலை உணவாக எடுத்துக் கொள்வதால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும். உப்புமாவில் நிறைந்துள்ள நல்ல கொழுப்புகள் உடல் எடையை குறைக்க உதவுகிறது.முளைக்கட்டிய தானியங்களை காலை உணவில் சேர்த்து கொள்வதால் இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் பிற்பகல் வரை பசியே எடுக்காது. இதனால் உடல் எடை குறையத் தொடங்கும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!