144 தடை உத்தரவு !! வாடகை வாகனங்கள் நகருக்குள் நுழையத் தடை!!

இன்று தியாகி இமானுவேல் சேகரன் நினைவுநாள் செப்டம்பர் 11ம் தேதி திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட உள்ளது. இந்த நாளில் தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் கூடுவர். அசம்பாவிதங்கள் நிகழா வண்ணம் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக செப்டம்பர் 9ம் தேதி சனிக்கிழமை முதல் செப்டம்பர் 15ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கவும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.
இந்த நாட்களில் வாடகை வாகனங்கள் அனுமதியின்றி மாவட்டத்திற்குள் நுழைய தடை. அத்துடன் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் ஒரு கிலோ மீட்டருக்கு முன்பு வரை மட்டுமே ஊர்வலமாக வரவும், ஜோதி எடுத்தல் போன்ற நிகழ்வுகளும் அனுமதிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!