இன்று தமிழகம் முழுவதும் 50000 சிறு குறு தொழில் நிறுவனங்கள் ஸ்டிரைக்!!

 
மின்கட்டணம் தொழில் நிறுவனங்கள்

தமிழகத்தில்   சிறு குறு தொழில் நிறுவனங்களின் மின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த  உயர்வைத் திரும்பப் பெறும் படி    கடந்த ஓராண்டாக சிறுகுறு நிறுவனங்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தன.  பலமடங்கு மின்கட்டணம் உயர்த்தப்பட்டதால்  தொழில் நிறுவனங்கள் பெரும் சவால்களை சந்தித்து வருவதாகவும்  உடனடியாக இதனை பரிசீலிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை .

இதனை கண்டித்து இன்று செப்டம்பர் 25ம் தேதி திங்கட்கிழமை நாள் முழுவதும் 50000   நிறுவனங்களை சேர்ந்த 3 கோடி ஊழியர்கள் பணி நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திடீர்  மின் கட்டண உயர்வால் தமிழகத்தில் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளன என  தொழிற்சங்க பிரதிநிதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்

தொழில் நிறுவனங்கள்


இது குறித்து தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ”  எல்டி 3பி இணைப்பு 0-112 கேவி நுகர்வோர்கள் முன்பு இருந்ததை போல் ஒரே பிரிவில் வைத்து கேவி ஒன்றுக்கு ரூ.35-லிருந்து ரூ.154-ஆக ( 430 சதவீதம் ) உயர்த்தப்பட்டுள்ளது. இதனை  முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.அதே போல் குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு புதிதாக விதிக்கப்பட்டுள்ள உச்சபட்ச பயன்பாட்டு நேர மின் கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும்  என்பது உட்பட 5  அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இது குறித்து தொடர்ந்து ஒரு வருடமாக   தமிழக அரசுக்கு  கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில்  எந்த வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மின்கட்டணம்

இதனை வலியுறுத்தும் வகையில் முதல்கட்டமாக பகுதி அளவில் கோவை, திருப்பூர் மாவட்ட எல்லை பகுதிகளில்   உண்ணா விரதம் மேற்கொண்டோம். அதற்கும் செவிசாய்க்காததால் இன்று செப்டம்பர்  25ம் தேதி கதவடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அன்றைய தினமே அறிவிக்கப்பட்டு இருந்தது.    அதன்படி இன்று கதவடைப்பு போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும். தமிழகம் முழுவதும் 3.2 லட்சம் தொழில் நிறுவனங்கள் இன்று  மூடப்படும். கோவையில் 30000   நிறுவனங்கள் உட்பட திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 63000  எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள் கதவடைப்பு போராட்டத்தில் பங்கேற்க உள்ளன. கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை எங்கள் போராட்டங்கள் தொடரும் எனக் கூறியுள்ளனர்.   

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web