இன்று மாநிலம் முழுவதும் ஆட்டோ, பேருந்து ஓடாது!! பள்ளி , பணிக்கு செல்வோர் கடும் அவதி!!

 
ஆட்டோ பேருந்து

சக்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  பெங்களூருவில்  இன்று செப்டம்பர் 11ம் தேதி தனியார் பேருந்துகள், வாகனங்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று நள்ளிரவு 12 மணி வரை தனியார் பேருந்துகள், ஆட்டோ, வாடகை டாக்சிகள்  , ரேபிட்டோ உட்பட 32 தனியார் சங்கங்களின் போக்குவரத்துக்கள் ஓடாது. 

ஆட்டோ


கர்நாடக முதல்வர் , போக்குவரத்து துறை அமைச்சர் இருவரும் தனியார் பேருந்து மற்றும் வாகனங்களின் உரிமையாளர்கள், டிரைவர்கள், தனியார் வாகன சங்கங்களுடன்  பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையில்   சக்தி திட்டத்தின் கீழ் தனியார் பேருந்துகளையும் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.அத்துடன் ஆட்டோ, வாடகை கார் டிரைவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், பெங்களூருவில் ராபிடோ வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்  என்பது உட்பட  பல்வேறு கோரிக்கைகளை தனியார் வாகன சங்கங்கள் முன்வைத்தன. அவற்றில் சில கோரிக்கைகளை ஏற்க போக்குவரத்து துறை மறுத்து விட்டது. இதனையடுத்து நாளை செப்டம்பர் 11ம் தேதி திங்கட்கிழமை  பெங்களூருவில் தனியார் வாகனங்கள் இயங்காது என   தனியார் வாகன சங்கங்கள் அறிவித்துள்ளன.

பந்த்
இதன்படி இன்று செப்டம்பர் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் நாளை திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணிவரை பெங்களூருவில் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், வாடகை கார்கள், தனியார் பள்ளி வாகனங்கள் இயக்கப்படாது. அனைத்து தனியார் போக்குவரத்து சங்கங்களும்  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தத்திற்கு   தனியார் பேருந்து சங்கங்கள், ஆட்டோ, ஓலா, ஊபர் உட்பட  32 சங்கங்கள் முழு ஆதரவு தெரிவித்துள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web