சர்ரென இறங்கிய தங்கத்தின் விலை... நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி... !

 
தங்கம்

சென்னையில்  ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள், முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இன்றைய விலை நிலவரப்படி  கிராமுக்கு ரூ 20 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ5870க்கும், சவரனுக்கு  ரூ 160  குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.46,960க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ77க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ77000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

தமிழகத்தை பொறுத்தவரை  குழந்தை பிறப்பு  முதல் காதுகுத்து, சடங்கு, கல்யாணம், சீமந்தம், வளைகாப்பு  என அனைத்து சுபநிகழ்வுகளுக்கு தங்கம் வாங்குவது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கையாக இருந்து வருகிறது.  குறிப்பாக  ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின்  முதலீடுகளில் ஒன்றாக தங்கம் இருந்து வருகிறது. ஆனால் தங்கத்தின் விலை  தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

nayanthara gold jewels


 திருமணம் நகை கொடுக்கும் நமது பாரம்பரியம் ஆபத்து காலங்களில் கை கொடுப்பதற்கும் உதவும் என்கிறது பாட்டி காலத்து சொலவடை.  தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்கவும் அதனை மாற்று முதலீடாக்கும் வகையில்  தங்க பத்திர மூதலீடு திட்டத்தை கொண்டுவந்த போதிலும், தங்கம் விற்பனை   குறையவில்லை.  உக்ரைன்   ரஷ்யா போர் தொடங்கிய சமயத்தில் சரிந்த தங்கம் தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.   22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்பட்டாலும் காரட் குறைய குறைய அதன் உறுதித் தன்மை அதிகரிக்கும் என்கின்றனர் நகை வியாபாரிகள்  22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகங்களும் கலந்தவை.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web